/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி பரிதாப பலி
/
தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி பரிதாப பலி
ADDED : செப் 25, 2025 11:51 PM

செஞ்சி: தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், சிங்கவரம் ஊராட்சியில் நேற்று முன்தினம் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
அப்போது, மரத்திலிருந்த தேன் கூட்டில் இருந்து பறந்து வந்த தேனீக்கள், கொட்டியதில் 11 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் 6 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
திருவண்ணாமலை மருத்துவமனையில், முனுசாமி மனைவி சின்னகுழந்தை,75; சிகிச்சை பலனின்றி அன்றிரவு இறந்தார். செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.