ADDED : செப் 04, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவெண்ணெய்நல்லுாரில், 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு ஆவணி மூல நட்சத்திரத்தையொட்டி சிவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடந்தது. இதனையொட்டி காலை 10:30 மணியளவில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை 3:00 மணியளவில் மாட வீதி வழியாக சுவாமி வீதியுலா வந்து, மலட்டாறு கரையில் எழுந்தருளினர். அங்கு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.