sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கண்டமங்கலத்தில் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.151.41 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் சேர்மன் வாசன் பெருமிதம்

/

கண்டமங்கலத்தில் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.151.41 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் சேர்மன் வாசன் பெருமிதம்

கண்டமங்கலத்தில் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.151.41 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் சேர்மன் வாசன் பெருமிதம்

கண்டமங்கலத்தில் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.151.41 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் சேர்மன் வாசன் பெருமிதம்


ADDED : செப் 30, 2025 07:54 AM

Google News

ADDED : செப் 30, 2025 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் ஒன்றியத்தில் 151 ேகாடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேர்மன் வாசன் கூறியதாவது:

கண்டமங்கலம் ஒன்றியத்தித்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 636 வீடுகள் (ரூ.8.75 கோடி), 441 வீடுகள் சீரமைப்பு (ரூ.6.32கோடி) பணிகள் நடைபெற்றுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்படி (அலகு 2) ரூ.18.14 கோடி மதிப்பீட்டில் 223 உட்கட்டமைப்பு பணிகள்,ரூ.12.20 கோடி மதிப்பீட்டில் 24 சாலை மேம்பாட்டு பணி,ரூ.4.04 கோடி செலவில் 4 புதிய ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்.

வானுார் மற்றும் விழுப்புரம் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6.66 கோடி ஒதுக்கீட்டில் 96 உட்கட்டமைப்பு பணிகள், ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் 43 ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மேம்பாடு,ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் 11 உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தின்படி, ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 10பணிகள், ரூ.6.69 கோடி மதிப்பீட்டில் 165 பணிகள்,ரூ.92.85 லட்சம் மதிப்பீட்டில் 18 பணிகள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல்,ரூ.28.13 கோடி மதிப்பீட்டில் 1364 மேம்பாட்டு பணிகள், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார மையம், ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் 307 சாலை மேம்பாட்டு பணிகள், மாவட்ட ஊராட்சி பொதுநிதியில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் 25 பணிகள் நடைபெற்றுள்ளது.

அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின்படி, ரூ.2.04 கோடியில்மேம்பாட்டு பணிகள், ரூ.18.54 கோடியில்934 நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள், நபார்டு திட்டத்தின் படி, ரூ.1.77 கோடியில்9 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி,ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் 118 புதிய வீடுகள், பழங்குடியினருக்கு ரூ.4.8 லட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ரூ.3.26 கோடியில் 873 புதிய கழிவறைகள்,ரூ.1.10 கோடி செலவில் 46 நுாலக கட்டடம், நபார்டு திட்டத்தின்படி, ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் 3 சாலைகள்,ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 12 பள்ளி உட்கட்மைப்பு , ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் கொங்கம்பட்டு,வி.பூதுார் ஊராட்சிகளில் கட்டடங்கம்,கொங்கம்பட்டு - ரங்காரெட்டிப்பாளையம் சாலை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, நபார்டு வங்கி மூலம் ரூ.10.01 கோடி மதிப்பீட்டில் 2 புதிய உயர் மட்ட பாலம் உள்ளிட்ட ரூ.151 ேகாடியே 41 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள், கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சேர்மன் வாசன் கூறினார்.






      Dinamalar
      Follow us