ADDED : ஜூன் 18, 2026 03:58 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: அரசு சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதிக்கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆலமரத்துக்குப்பத்தை சேர்ந்த ராஜூ என்பவர் தலைமையில் கொடுத்துள்ள மனு;
கண்டமங்கலம் ஒன்றியம், கோண்டூர் அரசு சுகாதார நிலையம் பல கிராமங்களுக்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது.
இங்கு போதிய படுக்கை வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இங்கு படுக்கை வசதியை அதிகரிக்கவும், ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
