/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலம் பணியை துவங்க நடவடிக்கை தேவை! நகாய் அதிகாரிகள் கவனிப்பார்களா?
/
மேம்பாலம் பணியை துவங்க நடவடிக்கை தேவை! நகாய் அதிகாரிகள் கவனிப்பார்களா?
மேம்பாலம் பணியை துவங்க நடவடிக்கை தேவை! நகாய் அதிகாரிகள் கவனிப்பார்களா?
மேம்பாலம் பணியை துவங்க நடவடிக்கை தேவை! நகாய் அதிகாரிகள் கவனிப்பார்களா?
ADDED : அக் 20, 2025 09:32 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் மேம்பால பணிகளை தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் இடங்களில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் (நகாய்) மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் தென்பசியார் பகுதி யில் மேம்பாலம் அமைக்க 60.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த பணியை மேற்கொள்ள சென்னை பி.எஸ்.டி., கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்துடன் நகாய் ஒப்பந்தம் செய்தது.
அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சர்வீஸ் சாலை போடப்பட்டது. பின், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மேலக்கொந்தை - செஞ்சி ரோடு பகுதி மற்றும் வடக்கு பைபாஸ் என இரு இடங்களில் மேம்பாலம் கட்ட பில்லர்கள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையே இந்த பணி கடந்த 50 நாட்களாக திடீரென நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பணிகள் தாமதம் குறித்து ஒப்பந்ததாரருக்கு நகாய் திட்ட இயக்குனர் வரதராஜன் விளக்க கடிதம் கேட்டு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.
ஒப்பந்ததாரர் தரப்பில் துறை அனுப்பிய நோட்டீசுக்கு தொழிலாளர் பற்றாக்குறை, மேம்பாலம் அமைக்க தேவையான மண் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாக விளக்கம் அளிக்கப் பட்டது.
விழாக்காலங்களில் சாலை போக்குவரத்து அதிகரித்ததால் சர்வீஸ் சாலைகளில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியும், பைபாஸ் சாலைக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ள 23 கிராம மக்கள் அன்றாடம் இச்சாலையை கடக்க முடியாமலும் அவதிக்குளாகி வருகின்ற னர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அடிக்கடி சிறு வாகன விபத்துகளும் நடக்கிறது.
எனவே, மக்கள் நலன் கருதி, விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரிய நோக்கத்திற்காக நகாய் துறையினரால் கட்டப்படுகின்ற மேம்பால பணியை ஒப்பந்ததாரர், கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் பணியை துரிதப்படுத்தி விரைந்து முடித்திட நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.