தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

 மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

 மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி


ADDED : ஏப் 03, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில், மாணவர்களிடம் மறைக்கப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

இ.எஸ்.கல்விக் குழும தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் வரவேற்றார். விழுப்புரம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தாமரைகண்ணன், திட்ட மேலாளர் சீனுவாசன், சுவாமி விவேகனந்தா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் கெஜலட்சுமி, பேராசிரியர் ஆதிநாராயணன், சென்னை மாநில கல்லுாரி பேராசிரியர் பாலாஜி, பேராசிரியர்கள் சரவணதாசன், சச்சிதானந்தம், மணிவர்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில், இ.எஸ்.கல்வியல் கல்லுாரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, சுவாமி விவேகனந்தா கலை அறிவியல் கல்லுாரி, விழுப்புரம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, பாடல், நடனம், வார்த்தை தேடல், மெஹந்தி, விளையாட்டு, இசைக்கருவி, நினைவாற்றல் சோதனை, கைவினை செய்தல் போன்ற போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிறைவாக, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் ரங்கநாதன், கணபதி ஆகியோர் சான்றுதழ் மற்றும் பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us