/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பஸ் - கார் மோதி விபத்து பெண் பலி; 5 பேர் காயம்
/
பஸ் - கார் மோதி விபத்து பெண் பலி; 5 பேர் காயம்
ADDED : ஜூன் 17, 2025 01:05 AM
திருச்சி; துறையூர் அருகே டாடா சுமோ, தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.
திருச்சி, சமயபுரத்தை சேர்ந்த ரகுபாஷா, 46, குடும்பத்தினருடன் துறையூருக்கு டாடா சுமோ காரில் சென்று விட்டு, நேற்று மதியம் சமயபுரம் திரும்பிக் கொண்டிருந்தார். புலிவலம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றதில் எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ரகுபாஷா மனைவி ரெஜியா பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிய ரகுபாஷா, அவரது தாய் கைருண்நிஷா, தங்கை பஷீலா, மகன் ஆலம், தங்கையின் பெண் குழந்தை ஆதிபா ஆகியோர் காயமடைந்தனர். புலிவலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.