/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துவங்குமா? பனியன் தொழிலாளர் எதிர்பார்ப்பு
/
சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துவங்குமா? பனியன் தொழிலாளர் எதிர்பார்ப்பு
சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துவங்குமா? பனியன் தொழிலாளர் எதிர்பார்ப்பு
சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துவங்குமா? பனியன் தொழிலாளர் எதிர்பார்ப்பு
ADDED : அக் 02, 2025 01:20 AM

திருப்பூர்: ''ஒப்பந்தம் முடிவடைந்ததால், பனியன் தொழிலாளர் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும்'' என்று தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.
திருப்பூரில் இயங்கும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு வகை ஜாப்ஒர்க் நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த எட்டு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
ஆறு பனியன் உற்பத்தியாளர் சங்கங்களும், எட்டு பனியன் தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி, பனியன் தொழிலாளர்களுக்கு சம்பளம் நிர்ணயித்து, ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.
இருதரப்பு சங்கத்தினரும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, சம்பள ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. அதனடிப்படையில், பனியன் தொழிலாளர்களுக்கு, நிறுவனங்கள் சம்பள உயர்வு அளிக்கின்றன.
செப். 30ல் ஒப்பந்தம் காலாவதியானது கடந்த 2021ல், பனியன் தொழிலாளருக்கு 32 சதவீதம் சம்பள உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த காலம், கடந்த செப். 30ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
புதிய சம்பள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நேற்று முதல், பனியன் தொழிலாளருக்கு புதிய சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பால், அந்நாட்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
வர்த்தகத்தில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதால், பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள், சம்பள ஒப்பந்த பேச்சு துவக்குவதில் நிதானம் கடைபிடித்து வருகின்றன.
புதிய சம்பள ஒப்பந்தத்தில் எதிர்பார்க்கும் அம்சங்கள் தொடர்பாக, பனியன் தொழிற்சங்கங்கள், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பிவைத்துள்ளன.
பழைய ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டநிலையில், உற்பத்தியாளர் சங்கங்கள் விரைவாக பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.