/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகரில் விரைவில் 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்
/
மாநகரில் விரைவில் 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்
மாநகரில் விரைவில் 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்
மாநகரில் விரைவில் 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்
ADDED : செப் 14, 2025 11:47 PM

திருப்பூர்; ''மாநகரில் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படும்'' என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் நேற்று கூறியதாவது: முன்னாள் முதல்வர் பழனிசாமி பிரசார சுற்றுப்பயணத்தில், திருப்பூருக்கு தி.மு.க., அரசு எந்த திட்டமும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் ஆயிரம் கி.மீ, ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 15 நாட்கள் என இருந்த குடிநீர் சப்ளை தற்போது 4 நாள் என்ற அளவில் மாறியுள்ளது. விரைவில் குறைந்த பட்சம் 2 நாள் என்ற அளவில் குடிநீர் வழங்கப்படும். மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளாமல் இருந்தது.
தற்போது இதற்கான நிதி ஒதுக்கீடு ெபற்று, பெரும்பாலான பகுதிகளில் இத்திட்டம் மேற் கொள்ளப்படவுள்ளது. நகரில் 14 ஆயிரம் மின் விளக்குகள், ஏழு உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நொய்யல் கரையில் இருபுறமும் ரோடு அமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. நல்லாறு கரையிலும் ரோடு அமைக் கப்படும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில் இதை மேற்கொள்ள முயற்சி நடக்கிறது.
பி.என்., ரோட்டில் உயர் மட்டப்பாலம் கட்டும் திட்டத்துக்கு தனியார் கன்சல்டன்சி நிறுவனங்கள் ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையில், அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதாலே, திருப்பூரில் உயர் மேம்பாலங்கள் கட்டும் திட்டத்தை அ.தி.மு.க., நிறைவு செய்யாமல் கிடப்பில் போட்டது. தற்போது தி.மு.க., ஆட்சியில் தான் அந்த பாலங்கள் எல்லாம் நிறைவு பெற்றுள்ளன.
தி.மு.க., ஆட்சியில், சாய ஆலை பிரச்னையின் போது, 200 கோடி ரூபாய் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அமெரிக்க வரி விதிப்பு பிரச்னைக்கும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டமும் திருப்பூரில் நடத்த முதல்வர் அனுமதித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், கூடுதலாக புதிய திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இது குறித்து இரு நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும். இதன் மூலம் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
- தினேஷ்குமார்,
மேயர்.