/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
வி.ஐ.பி.,யை பாடாய்ப்படுத்தும் 'வாஸ்து'; 'டாஸ்மாக் பாரில்' விக்கிறாங்க 'போதை வஸ்து'
/
வி.ஐ.பி.,யை பாடாய்ப்படுத்தும் 'வாஸ்து'; 'டாஸ்மாக் பாரில்' விக்கிறாங்க 'போதை வஸ்து'
வி.ஐ.பி.,யை பாடாய்ப்படுத்தும் 'வாஸ்து'; 'டாஸ்மாக் பாரில்' விக்கிறாங்க 'போதை வஸ்து'
வி.ஐ.பி.,யை பாடாய்ப்படுத்தும் 'வாஸ்து'; 'டாஸ்மாக் பாரில்' விக்கிறாங்க 'போதை வஸ்து'
ADDED : செப் 15, 2025 11:52 PM

''அ ப்பப்பா... என்ன வெய்யில்... மழைக்காலத்துல இப்படி வெய்யில் அடிச்சா என்ன பண்றது,'' என புலம்பியபடியே வந்தாள் மித்ரா.
''ஆமா மித்து. என்ன பண்றது. கிளைமேட் மாறிட்டே வருது,'' என்ற சித்ரா, ''அ.தி.மு.க., பழனிசாமி 'விசிட்' வந்து போனதுல கட்சிக்காரங்க ரொம்ப குஷியா இருக்காங்களாம்,'' என ஆரம்பித்தாள்.
''ஆமாங்க்கா... அதுவும், அவிநாசியில் செம வரவேற்பாம். கிழக்கு ரத வீதியில தான், கூட்டம் நடந்துச்சு. அந்த ரோட்டை குத்தகைக்கு எடுக்காத குறையா, பிளக்ஸ் பேனர், கொடிக்கம்பம்ன்னு வச்சு கட்சிக்காரங்க அசத்திட்டாங்க. போக்குவரத்தையும் தடை பண்ணி 'டேக் டைவர்ஷன்' பண்ணிவிட்டதால, மக்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டாங்க. ஜெ.,க்கு கூட இவ்ளோ ஏற்பாடு இல்லைன்னு அந்தக்கட்சிக்காரங்களே பேசறாங்க...'' என்றாள் மித்ரா.
''இருக்காதா பின்னே. தன்னோட சுற்றுப்பயணம் சம்மந்தமா, நிர்வாகிங்ககிட்ட பழனிசாமி பேசறப்போ, 'அவிநாசி தொகுதி நல்லா இருக்கு. தொகுதிக்கு நெறைய செஞ்சிருக்கோம்'ன்னு சொல்லியிருக்காரு. அத அப்படியே லோக்கல் நிர்வாகிங்ககிட்ட சொன்ன மாஜி மினிஸ்டர், ''தொகுதி மேல பொதுச் செயலாளரு நிறைய நம்பிக்கை வச்சிருக்காரு,''
''அதனை காப்பாத்துற மாதிரி ஏற்பாடு பண்ணிடுங்க,'ன்னு உசுப்பிவிட, பணம், பரிசுன்னு கொடுத்து, கூட்டத்தை திரட்டிட்டாங்களாம். காசு கொடுக்காம வந்தவங்களும் இருக்காங்களாம். ஜெ. வந்தப்போ கூட இவ்வளவு பிரம்மாண்டமா நாங்க வரவேற்பு கொடுத்ததில்லைன்னு, கட்சிக் காரங்களே சொல்றாங்கன்னா பார்த்துக்கோ...'' என்றாள் சித்ரா.
பேரவையினர் 'அப்செட்' ''கட்சிக்காரங்ளோட பேனர்ல கூட நிறைய அரசியல் இருக்குல்ல அக்கா...'' என்ற மித்ரா, ''நார்த்துல, பழனிசாமி கூட்டத்துக்கு கூட்டம் சேர்க்க, நிறைய செலவு செஞ்சிருக்காங்க. முளைப்பாலிகை, பலுான் விடறது, பூர்ண கும்ப மரியாதை செஞ்சவங்களுக்கு, எவர்சில்வர் குடம் கொடுத்திருக்காங்க. பூ துாவி வரவேற்பு கொடுத்தவங்களுக்கு, எவர்சில்வர் தட்டு. மகளிரணிக்கு யூனிபார்ம் சேலை வாங்கிக் கொடுத்து பணத்தை தண்ணியா இறைச்சிட்டாங்க...''
''ஆனா, சவுத் தொகுதியில கூட்டத்துக்கு, பேரவை நிர்வாகியும், அவரோட ஆதரவாளர்களும் தான், நிறைய செலவு பண்ணி, ஏற்பாடுகளை செஞ்சிருக்காங்க. ஆனா, பொதுச் செயலாளர் பேசறப்போ, ஏற்பாடு செஞ்ச நிர்வாகிகளோட பேரை சொல்லாம விட்டுட்டாராம். யாரோ, அவர்க்கிட்ட 'நேம் லிஸ்ட்'டை மாத்தி கொடுத்துட்டாங்கன்னு புலம்பறாங்க'' என்றாள் சித்ரா.
''வாகன சோதனைங்கற பேர்ல, போலீஸ்காரங்க வசூல் அள்றாங்களாமே,'' பேச்சை மாற்றினாள் மித்ரா.
''இது, எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தானே...'' சித்ரா சொல்ல, ''கரெக்ட்தாங்க்கா. 32வது வார்டு, பழைய ராமகிருஷ்ணா ஏரியாவுல, போன வாரம் சண்டே, போலீஸ் ஆபிசர் ஒருத்தர் வாகன சோதனை செஞ்சிட்டு இருந்தார். அப்போ, சிலரை தகாத வார்த்தையால் திட்டிருக்காரு. வாகன ஓட்டிகளை மடக்கி, அவங்ககிட்ட டாக்குமென்ட் இல்லைங்கற பட்சத்துல, சட்டப்படி நடவடிக்கை எடுக்காம, அஞ்சாயிரம் வரைக்கும் லஞ்சம் வாங்குறாரு. ரெண்டு மணி நேரத்துல, டூவீலர் ஓட்டிட்டு வந்தவங்ககிட்ட இருந்து மட்டும், ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் அள்ளிட்டாரு; அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்ன்னு, ஆளுங்கட்சி நிர்வாகியே புகார் பண்ணிட்டாருன்னா பார்த்துக்கோ...'' என்றாள் மித்ரா.
''ஆளுங்கட்சி வி.ஐ.பி., களே புகார் சொல்ற அளவுக்கு ஆகிடுச்சே...'' என, 'உச்' கொட்டிய சித்ரா, ''நம்ம 'தாமு' அங்கிள் போன் பண்ணாரு; நாளைக்கு வர்றதா சொன்னாரு'' என்ற மித்ரா, ''கார்ப்ரேஷன் வி.ஐ.பி.,ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. முதல் மண்டலத்துல ரெவின்யூ பிரிவுல வேல செய்ற ஒருத்தரு, எந்தவொரு ஆபீசரின் பேச்சையும் கேட்கிறதே இல்லையாம். டேக்ஸ் போட அப்ளிகேஷன் கொடுத்தா நேர்ல வரணும்ன்னு சொல்றாராம். போய் பார்த்தா, ஆபீஸ்ல இருக்கிறதே இல்லையாம்; போன்ல கூப்பிட்டாலும் 'ரெஸ்பான்ஸ்' பண்றது இல்லையாம். அவரு கோயமுத்துார்ல இருந்து வர்றதால, ஆபீஸ் டைம் முடியறதுக்குள்ள கிளம்பிடறாராம்,'' சித்ரா கோபப்பட்டாள்.
ஆபீசர்கள் 'லடாய்' ''இந்த மாதிரி ஆபீசர்களால் தான் மக்களுக்கு கோபத்தை வர வைக்குது'' என்ற மித்ரா, ''ரெண்டு நாளைக்கு முன்னாடி, சாயங்காலம் 4:00 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில, நுகர்வோர் காலாண்டு கூட்டம் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அஞ்சு மணிக்கு தான், ஆபீசர் வந்திருக்காரு. 'புதுசா கலெக்டர் வந்திருக்கிறதால, அவர் தலைமைல கூட்டம் நடத்தணும்'ன்னு, நுகர்வோர் அமைப்பினர் சொல்ல, 'கூட்டம் ரத்து செய்யப்படுது'ன்னு சொல்லிட்டு அந்த ஆபீசர் 'விறுவிறு'ன்னு கிளம்பிட்டாராம்,''
''அதுக்கப்புறம் நுகர்வோர் சங்கத்துக்காரங்க கலெக்டரை பார்த்து பேசி, அவர் தலைமையில கூட்டம் நடத்த வச்சிருக்காங்க. அதுல, சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்ன்னு சொல்லி, கலெக்டர் ஆபீஸ்ல நடந்த குறைகேட்பு கூட்டத்துல, சில நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தவங்க மனு கொடுத்திருக்காங்க. ஆனா, அந்த ரெவின்யூ ஆபீசர், மனுவை வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாராம். பக்கத்துல இருந்த ஆபீசர்ங்ககிட்டேயும், 'அவங்க கொடுக்கிற மனுவை வாங்காதீங்க... அவங்க நேரடியாக கலெக்டர்கிட்டயே கொடுக்கட்டும்'ன்னு கோவமா சொல்லிட்டாராம்,''
''இதனால, அதிருப்தி அடைஞ்ச, நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தவங்க, அங்கயே கீழே உக்காந்து போராட்டம் பண்ணிருக்காங்க, கலெக்டரோட உதவியாளரு பேசி, சமாதானம் பண்ணி, மனு வாங்க ஏற்பாடு பண்ணியிருக்காரு,'' என்றாள் சித்ரா.
''அதிகாரிகளுக்கு ஈகோ என்ன வேண்டிக்கிடக்கு,'' என்ற மித்ரா, ''பல்லடம் யூனியன் ஆபீசில, பெரிய ஆபீசரோட 'ஆசி'யால் ஒரு ஆபீசர், நாலு வருஷமா ஒரே 'சீட்'ல இருக்காங்களாம். அதே மாதிரி, பஞ்சாயத்து செகரட்டரி ஒருத்தரு, 'டிரான்ஸ்பர்' போட்டும் போகாம, ஏற்கனவே வேலை பார்த்த பஞ்சாயத்து தான் வேணும்ன்னு அடம் பிடிக்கிறாராம்'' என்ற மித்ரா, ''அந்த யூனியன்ல கிராம பஞ்சாயத்துகளை கவனிக்கிற பெரிய ஆபீசரை டிரான்ஸ்பர் பண்ணாங்களல்ல. அவரோட ஐடி.,யை வச்சு தான், ஊராட்சியில வேல செய்றவங்களுக்கு சம்பள பில், பாஸ் பண்ணணுமாம். ஆனா, அவருக்கு பதிலா புதுசா பொறுப்பேத்த ஆபீசர்க்கு, ஐ.டி., மாத்தி கொடுக்காததால, இன்னும், சம்பளம் போடாம இருக்காங்களாம்,'' என பல்லடம் 'பஞ்சாயத்தை' விளக்கினாள்.
வாஸ்து வேலை செய்யுமா? ''தொகுதிக்கு ரெண்டு எம்.எல்.ஏ., ஆபீஸ் வைக்கிற அளவுக்கு மக்களுக்கு நல்லது பண்றாங்க போல...'' என சிரித்தாள் சித்ரா.
''புரிஞ்சு போச்சுங்க்கா. நீங்க சவுத் வி.ஐ.பி., ஆபீஸ் விவகாரத்தை தானே சொல்றீங்க. கலெக்டர் ஆபீஸ் எதிர்ல தான், அந்த ஆபீஸ் இருக்கு. ஆனா, அதுல வாஸ்து சரியில்லைன்னு ஒரு சென்டிமென்ட் இருக்கு. இதனால, இப்போ இருக்கற தொகுதி வி.ஐ.பி., அந்த ஆபீசுக்கு போறதே இல்லையாம். அதுக்கு பதிலா, பார்க் ரோட்ல புதுசா ஆபீஸ் கட்டியிருக்காங்க. நாள், நட்சத்திரம் பார்த்து திறப்பு விழா நடத்தவும் ஏற்பாடு செஞ்சிட்டு இருக்காங்களாம்க்கா,'' என்றாள்.
''நானும் ஒரு ஆளுங்கட்சி மேட்டர் சொல்றேன்...'' என்ற சித்ரா, ''மாற்று கட்சியை சேர்ந்தவங்கள ஆளுங்கட்சியில இணைக்கிற நிகழ்ச்சி, நெருப்பெரிச்சல்ல நடத்தினாங்க. அந்த பகுதியை சேர்ந்தவங்க மட்டுமில்லாம, எங்கெங்கோ இருந்தும், ஆட்களை கூட்டிட்டு வந்துட்டாங்க. அதுல சிலரு, அடிதடி கேஸ்ல சம்மந்தப்பட்டவங்களும் இருந்தாங்களாம். இதுல என்ன கூத்துன்னா அதுல கொஞ்சம் பசங்க, போதையில ஒரே அட்ராசிட்டியாம்...,'' என்றாள்.
''பொறுப்பா நடந்துக்க வேண்டிய கட்சி நிர்வாகிகளே பொறுப்பில்லாம இருக்கறப்போ, புதுசா கட்சிக்கு வர்ற இந்த சின்ன பசங்க எப்படி இருப்பாங்க...?'' என சலித்துக் கொண்ட மித்ரா, ''கொஞ்ச நாள் முன்னாடி, கமிஷனர் ஆபீஸ் பக்கத்துல இருக்கற 'ஒன் வே'யில லோக்கல் ஆளுங்கட்சி வி.ஐ.பி.,களோட வண்டி அணிவகுத்து போயிருக்கு. இத பார்த்த பப்ளிக், சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம்; இவங்களுக்கு ஒரு சட்டமான்னு புலம்பியிருக்காங்க,'' என்றாள்.
''வெ.கோவில் ஒற்றர் படையினர், ஸ்டேஷன் பக்கம் போறதே இல்லையாம். எந்தவொரு பிரச்னையா இருந்தாலும், ரெண்டு பேரும் ஜாய்ன் பண்ணி பேசி, ஒரே மாதிரி 'ரிப்போர்ட்' அனுப்பறாங்களாம். நிறைய விஷயங்களை ஆபீசர் கவனத்துக்கு கொண்டு போறதே இல்லையாம்,'' என்றாள் மித்ரா.
''மித்து, அவிநாசி வட்டாரத்திலுள்ள 12 'டாஸ்மாக்' கடைகளிலும், 24 மணி நேரமும் சரக்கு, டபுள் ரேட்டுக்கு விக்கிறாங்கன்னு போன வாரம் பேசினோமில்ல. ஆனா, அதபத்தி மதுவிலக்கு அதிகாரி கண்டுக்கவேயில்லையாம். 'இங்க மட்டுமா விக்கறாங்க. ஸ்டேட்புல்லா இப்படித்தான் இருக்குன்னு, அந்த டிபார்ட்மென்ட் அதிகாரியே சொல்லிட்டாராம், இதுல என்ன கொடுமைன்னா, பவர்ஹவுஸ், கந்தாம்பாளையம் கடைகளில் சரக்கோட, 'போதை வஸ்துகளும் ஜோரா விக்கறாங்களாம்...''
''உண்மைதாங்க்கா. அங்கிருக்கற சப்டிவிஷன் ஆபீசரும் கண்டுக்காததால, சரக்கு ஆறா ஓடுதாம். இனி, எஸ்.பி.,தான் இதனை கண்காணிக்கணும் போல...'' என்ற மித்ரா, ''அக்கா... நான் கிளம்பறேன்; மழை வர்ற மாதிரி இருக்கு...'' என்று சொல்லி புறப்பட்டாள்.