sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏற்றுமதி ஆர்டர் மீது கேள்வி எழுப்பும் உரிமை; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு

/

ஏற்றுமதி ஆர்டர் மீது கேள்வி எழுப்பும் உரிமை; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு

ஏற்றுமதி ஆர்டர் மீது கேள்வி எழுப்பும் உரிமை; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு

ஏற்றுமதி ஆர்டர் மீது கேள்வி எழுப்பும் உரிமை; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 03, 2025 11:45 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வர்த்தகர்கள், சப்ளை குறித்து கேள்வி எழுப்புவது போல், ஏற்றுமதி ஆர்டர்கள் கொள்முதல் குறித்தும் கேள்வி எழுப்பும் உரிமையை எதிர்பார்ப்பதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்னளர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில், மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்புள்ள கொள்முதல் கொள்கை குறித்த கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

'எத்திக்கல் டிரேடிங்' அமைப்பின் தெற்கு ஆசிய தலைவர் ராணா அலோக் வரவேற்றார். 'பிராண்டு'களுக்கான பொறுப்புள்ள கொள்முதல் கொள்கைகளை உருவாக்க, 'எத்திக்கல் டிரேடிங்' அமைப்பு, உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. ஆர்டர் தாமதம், திடீரென ஆர்டர் ரத்தாவது போன்ற பாதிப்புகளின் போது, சட்டரீதியான கொள்முதல் நடைமுறை அமலில் இருக்க வேண்டும்.

ஐரோப்பியாவின் புதிய சட்டம், மனித உரிமை வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளை கட்டாயமாக்குகின்றன. இவை தொழிற்சாலைகளுக்கு எந்த வகையில் பயன்படும் என்பதை, 'எத்திக்கல் டிரேடிங்' அமைப்பு விளக்கியது.

திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் பேசுகையில்,'' திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கதிற்கான அடுத்த ஆண்டுகளுக்கான தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தொழில்வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு, 'எத்திக்கல் டிரேடிங்' அமைப்புடன் இணைந்து செயலாற்றி வருகிறது. அமெரிக்கவுடன் ஒரு கடுமையான நிலைமையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இனிமேல், ஐரோப்பாவை நோக்கி சந்தையை விரிவாக்க முயற்சிக்கிறோம். ஐரோப்பிய சந்தையிலும், பல்வேறு சவால்கள் உள்ளன,'' என்றார்.

'எத்திக்கல் டிரேடிங்' நிறுவனத்தின் நிர்வாகிகள் மெலிசா கரடானா, மார்கெரிட்டா பரோடி ஆகியோர், ஏற்றுமதியாளர் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதற்கான முறைகள் பற்றி விளக்கினர். மேலும் தற்போதைய வாங்கும் நடைமுறைகள், தொழிலாளர்கள், சப்ளையர்கள் மற்றும் பிராண்டு தொடர்புகளில் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பொது செயலாளர் திருக்குமரன் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

நியாயமாக இருக்க வேண்டும்

திருப்பூர் தொழில் வளம் பங்குதாரர்கள் அமைப்பு, பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைக்கிறது. தொழிலாளர்களின் நலன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை வணிக நடைமுறைகளை மேம்படுத்தக் கூட்டு முயற்சியாக செயல்படுகிறது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வர்த்தகர்கள், 'சப்ளை' குறித்து கேட்க உரிமை இருக்கிறது; அதேபோல், நியாயமான ஏற்றுமதி ஆர்டர் கொள்முதல் சட்ட விதிமுறைகளையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஆர்டர் ரத்து, விலை குறைப்பு போன்ற விஷயங்களில் நியாயமாக இருக்க வேண்டும். - சுப்பிரமணியன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்








      Dinamalar
      Follow us