/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளத்தில் அமைத்த ரோடு மழைநீரால் மூழ்கியது! மக்கள் எதிர்ப்பை மீறியதன் விளைவு
/
குளத்தில் அமைத்த ரோடு மழைநீரால் மூழ்கியது! மக்கள் எதிர்ப்பை மீறியதன் விளைவு
குளத்தில் அமைத்த ரோடு மழைநீரால் மூழ்கியது! மக்கள் எதிர்ப்பை மீறியதன் விளைவு
குளத்தில் அமைத்த ரோடு மழைநீரால் மூழ்கியது! மக்கள் எதிர்ப்பை மீறியதன் விளைவு
UPDATED : அக் 21, 2025 03:12 AM
ADDED : அக் 20, 2025 10:30 PM

- நமது நிருபர் -: மக்கள் எதிர்ப்பை மீறி, அவிநாசி அருகே குளத்துக்குள் அமைத்த ரோடு மழையால் முற்றிலும் சேதமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அடுத்த நடுவச்சேரியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 35 ஏக்கர் பரப்பிலான குளம் உள்ளது. சுற்றுப்பகுதியில் சேகரமாகும் மழை நீர் இந்த குளத்தில் சென்று தேங்குகிறது. இதில் தேங்கும் நீர் சுற்றுப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.இந்த குளம் நடுவச்சேரியில், கூட்டப்பள்ளி செல்லும் ரோட்டிலிருந்து சற்று தள்ளி ஈஸ்வரன் கோவில் அருகே அமைந்துள்ளது.
குளத்தில் நீர் நிரம்பாமல் உள்ள காலங்களில், குளத்துக்குள் இறங்கி கடந்து செல்லும் வகையில் ஒரு மண் வழிப்பாதை நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது.
இதன் வழியாக, வளையபாளையம், சிலுவைபுரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்வோர் பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையைப் பயன்படுத்துவதால் ஏறத்தாழ 2.5 கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் பயணம் குறைந்தது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இந்த குளம் இணைக்கப்பட்டு தற்போது இதன் வாயிலாகவும் குளத்துக்கு நீர் ஆதாரம் கிடைத்து வருகிறது.
கடந்த 2020ல், அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்பில் இந்த பாதையை தார் ரோடாக மாற்றும் வகையில் பணி துவங்கியது.
குளத்துக்கு நீர் வரும் போது இங்கு ரோடு அமைந்தால் ஆபத்து; ரோடும் வீணாகும் என்று கருத்து எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ரோடு போடும் பணி துவங்கி நடந்தது. முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவும் கிடப்பில் போடப்பட்டு ரோடு போடும் பணி நிறைவடைந்தது.
இந்நிலையில் கடந்த இரு நாள் முன் அவிநாசி சுற்றுப்பகுதியில் பெய்த மழையால் பெருக்கெடுத்த மழை நீர் இந்த ரோட்டை முற்றிலும் சேதப்படுத்தி, குளத்தினுள் சென்று பாய்ந்தது.
மக்கள் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்ட ரோடு தற்போது எந்தப் பயனும் இன்றி மழை நீரில் மூழ்கி வீணாகியது தான் மிச்சம்.
தவறு செய்தோர் மீது புகார் குளத்தில் ரோடு பணி துவங்கிய போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் திட்டம் துவங்கி அதில் 'பயன்' பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இது போல் பல இடங்களில் ரோடு பணியை துவங்கினர். அசநல்லிபாளையம் பகுதியிலும் இது போன்ற பிரச்னை உள்ளது. இந்த ரோடு பணி குறித்த விவரங்களை ஆர்.டி.ஐ., மூலம் பெற்று இதில் தவறு செய்தோர் மீது புகார் அளிக்கவுள்ளோம்.
- பொதுமக்கள்.