/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பக்தர் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர்! 'சிவாயநம' கோஷம் விண்ணை பிளந்தது
/
பக்தர் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர்! 'சிவாயநம' கோஷம் விண்ணை பிளந்தது
பக்தர் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர்! 'சிவாயநம' கோஷம் விண்ணை பிளந்தது
பக்தர் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர்! 'சிவாயநம' கோஷம் விண்ணை பிளந்தது
UPDATED : மே 09, 2025 07:05 AM
ADDED : மே 09, 2025 06:41 AM

அவிநாசி: சுட்டெரித்த சூரியனையும் பொருட்படுத்தாமல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் சித்திரை தேர்த்திருவிழா பெரிய தேரோட்டம் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, தேரோட்டம் நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மெயின் ரோட்டில் இருந்து மேற்கு ரத வீதிக்கு தேர் திரும்பும் பகுதியில், கடந்த ஆண்டு கட்டப்பட்ட கல்வெர்ட் உறுதித் தன்மை இல்லை என்றும், தேர் செல்லும் போது கல்வெர்ட் சேதம் அடைந்து தேர் சக்கரம் இறங்கி நிற்கும் நிலை உருவாகும் என சிலர் தவறான தகவலை பரப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, கலெக்டர் கிறிஸ்துராஜ், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், அறநிலைத்துறை இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) ஹர்ஷினி, கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், டி.எஸ்.பி., சிவகுமார், நகராட்சி தலைவர் தனலட்சுமி, தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் மேற்கு ரத வீதியில் அவசரமாக கூடி, ஆலோசித்தனர்.
அதில், தேரின் எடைக்கேற்ப உறுதி தன்மையாக கல்வெர்ட் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அதிக எடை கொண்ட பெரிய தேரை தாங்கும் விதமாக கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து, நகராட்சி பொறியாளர், உறுதி தன்மையாக உள்ளது என சான்று அளித்தார். இருப்பினும், தேர் வரும்போது இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு அதன் மீது தேர் இழுக்கப்பட்டது.
இதனால், அப்பகுதியில், 40 நிமிடம் கூடுதலாக தேர் இழுப்பது தாமதமானது. அதனை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுக்க, மதியம், 2:10 மணிக்கு தேர் மேற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது.
அன்னதானம்
தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று நான்கு ரத வீதியில் உள்ள மண்டபங்களிலும், வாகனங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு அமைப்பிர், பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். முன்னதாக, டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவிநாசி மற்றும் சேவூர் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையினர் மருத்துவ முகாமை அமைத்திருந்தனர். தேர் சக்கரத்திற்கு குடில் முட்டி போடுபவர்களுக்கும், சன்னை போடுபவர்களுக்கும் அவ்வப்போது ஓ.ஆர்.எஸ். பவுடர் கலந்த நீர் வழங்கப்பட்டது. மேற்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்பட்டவுடன், நகராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மை பணியாளர்கள் நான்கு ரத வீதிகளிலும், துாய்மை பணிகளை உடனுக்குடன் மேற்கொண்டனர். அவ்வகையில், மொத்தம், 21 டன் குப்பை அகற்றப்பட்டதாக, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தெரிவித்தார்.