/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில் அய்யம்பாளையத்தில் மரக்கன்று நடவு

ADDED : செப் 19, 2025 10:08 PM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், கே.அய்யம்பாளையத்தில், 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது.
கடந்த, 2015ல் துவங்கிய இத்திட்டத்தில், 22 லட்சம் மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் என்ற இலக்குடன் பசுமை பணி நடந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் வசதியுள்ள விளைநிலங்களில், பயனுள்ள மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, விவசாய குடும்பங்கள் அதிகம் ஆர்வம் செலுத்துகின்றன. அதன்படி, பல்லடம் அடுத்துள்ள கே.அய்யம்பாளையம் எம்.வி.எஸ்., நகர் பகுதியில் உள்ள நிலத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நில உரிமையாளர்கள், நந்தகுமார், பாலசந்தர், குருசாமி, பாண்டி, சீனிவாசன், வேலுசாமி, தட்சிணாமூர்த்தி, பிரேமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.வேம்பு - 50, புங்கன் - 25, நீர்மருது - 25, நாவல் - 15, பூந்திக்கொட்டை - 20, சொர்க்கம் - 15, பூவரசு - 35, புளி - 15 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம், என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.