/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கைது
/
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கைது
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கைது
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கைது
ADDED : செப் 23, 2025 06:31 AM

திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பை கழிவு முதலிபாளையம் பகுதியில், பாறைக்குழிகளில் கொட்டப்படுகிறது.
இதை தவிர்க்க, மாற்று வழியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக, விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், திடீரென காங்ேகயம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு தாசில்தார் சரவணன், பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் பேச்சு நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை.
'எம்.எல்.ஏ., மற்றும் மேயர் இங்கு வர வேண்டும். பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும்' என வலியுறுத்தி, மறியலை தொடர்ந்தனர்.