/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிப்ட்-டீ' மாணவர்கள் லிம்கா சாதனைக்காக புதிய முயற்சி! பிரமாண்ட பரமபத மேடை அமைத்து அசத்தல்
/
'நிப்ட்-டீ' மாணவர்கள் லிம்கா சாதனைக்காக புதிய முயற்சி! பிரமாண்ட பரமபத மேடை அமைத்து அசத்தல்
'நிப்ட்-டீ' மாணவர்கள் லிம்கா சாதனைக்காக புதிய முயற்சி! பிரமாண்ட பரமபத மேடை அமைத்து அசத்தல்
'நிப்ட்-டீ' மாணவர்கள் லிம்கா சாதனைக்காக புதிய முயற்சி! பிரமாண்ட பரமபத மேடை அமைத்து அசத்தல்
UPDATED : செப் 04, 2025 07:29 AM
ADDED : செப் 03, 2025 11:43 PM

திருப்பூர்; திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர் குழுவினர், தொடர்ந்து நான்கு நாட்களாக செயல்பட்டு, பிரமாண்டமான பரமபத மேடையை உருவாக்கியுள்ளனர்; இது, 'லிம்கா' சாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர்கள், பேஷன் டிசைனிங் கற்பதுடன், கற்பனையை துாண்டும் வகையிலான புதிய சாதனைகளையும் அவ்வப்போது படைக்கின்றனர். அதன்படி, 'அப்பேரல் பேஷன் டிசைன்' பிரிவு முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் 74 பேர் குழுவாக இயங்கி, 'லிம்கா' சாதனைக்கான முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
கடந்த, செப்., 29ம் தேதி துவங்கி, தினமும் காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 வரை, நான்கு நாட்கள் தொடர்ந்து செயல்பட்டு, பிரமாண்டமான பரமபத வாசலுடன் கூடிய மேடையை உருவாக்கியுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான பரம பத கட்டங்கள், 1,089 சதுரடி பரப்பில், இந்திய கலை ஓவியம் வரையப்பட்டுள்ளன. நுாறு பெட்டிகளில், 'கலம்கரி', தஞ்சாவூர், 'வார்லி' உட்பட, 100 வகையான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
கட்டங்களின் இடையே, 'புளோரல் பொல்லாக்' போன்ற கலை வடிவங்களுடன், ஏணி மற்றும் பாம்பு உருவங்களும் இடம்பெற்றுள்ளன. ஓவியங்கள் தீட்ட, 'அக்ரிலிக்', 'போஸ்டல்', 'வாட்டர் கலர்', 'கிரேயான்ஸ்' போன்ற பல்வகை பெயின்டிங் பொருட்கள் பயன்படுத்தியதால், வண்ண மிகு அழகு சேர்க்கப்பட்டுள்ளது. பாரம்பரிய விளையாட்டை அறிந்துகொள்வதுடன், தமிழர் கலை வடிவங்களை புரிந்து கொள்ளவும் இது வாய்ப்பாக அமைந்துள்ளதாக, பலரது பாராட்டை பெற்றுள்ளது.
இதுகுறித்து கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் தலைவர் மோகன், இணை செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், கல்லுாரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் முன்னிலையில், 'லிம்கா' சாதனைக்கான, கூட்டு முயற்சி நிறைவடைந்துள்ளது. இது, 'லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளோம். மாணவர்களின் நுாதன முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்,' என்றனர்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான பரமபத கட்டங்கள், 1,089 சதுரடி பரப்பில், இந்திய கலை ஓவியம் வரையப்பட்டுள்ளன. நுாறு பெட்டிகளில், 'கலம்கரி', தஞ்சாவூர், 'வார்லி' உட்பட, 100 வகையான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன