/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணய ஆணை
/
பின்னலாடை தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணய ஆணை
பின்னலாடை தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணய ஆணை
பின்னலாடை தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணய ஆணை
ADDED : ஜூன் 10, 2025 11:15 PM
திருப்பூர்:
தமிழக அரசு வெளியிட்ட, பின்னலாடை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணய அரசாணைக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், பின்னலாடை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில், திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனால், தொழிலாளருக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தில், 1,700 ரூபாய் குறைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை (100 நாள் திட்டம்) விடை, சில பிரிவு தொழிலாளரின் சம்பளம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டதற்கு, சி.ஐ.டி.யு., கண்டனம் தெரிவித்தது.
குறைந்தபட்ச ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அரசு கோரிக்கையை ஏற்காத நிலையில், சி.ஐ.டி.யு.,- எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், தொழிலாளர் துறை வெளியிட்ட அரசாணைக்கு, ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சம்பத் கூறுகையில், ''சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றி, பின்னலாடை தொழிலாளருக்கான குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்யப்படவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்று, கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. புதிய கணக்கீட்டை முறையை ரத்து செய்ய வேண்டும். புதிய கமிட்டி அமைத்து, நியாயமான குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.