/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் வழிப்பாதையில் இறைச்சிக்கழிவு தொடர் கதையாகும் அட்டூழியம்
/
நீர் வழிப்பாதையில் இறைச்சிக்கழிவு தொடர் கதையாகும் அட்டூழியம்
நீர் வழிப்பாதையில் இறைச்சிக்கழிவு தொடர் கதையாகும் அட்டூழியம்
நீர் வழிப்பாதையில் இறைச்சிக்கழிவு தொடர் கதையாகும் அட்டூழியம்
ADDED : ஜூன் 22, 2025 11:47 PM

அவிநாசி: அவிநாசியில் இறைச்சிக்கடைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகள், தோட்டத்துப் பகுதிகள், சாக்கடைகள், நீர் நிலைகள் என கடைக்காரர்கள் கொட்டி வருகின்றனர்.
ஆட்டையம்பாளையம் அருகே நல்லாற்று நீர்வழிப்பாதை பகுதியில் உள்ள ஒரு மீன் விற்பனை நிலையத்தில் இருந்து மீன் கழிவுகளை, கடை ஊழியர்கள் நேற்று நல்லாற்று நீர் வழித்தடத்தில் கொட்டிச்சென்றனர்.
அவிநாசி குளம் காக்கும் அமைப்பினர் கூறியதாவது:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுடன் வரலாற்றுத் தொடர்புடைய தாமரைக் குளக்கரையோரத்தை கடந்த ஒரு ஆண்டாக துாய்மை செய்து வருகிறோம். குளக்கரையில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான முன்னெடுப்பு பணியை மேற்கொள்கிறோம். தாமரைக்குளத்தில் தண்ணீர் வற்றாமல் உள்ளது.
பலவகை பறவை இனங்கள் குளத்தின் உள்ளே உள்ள மரங்களில் கூடுகள் கட்டி குஞ்சுகள் பொறித்து சுற்றுச்சூழலை பசுமையாக்குகின்றன.
ஆனால், அவிநாசி நகரம் மற்றும் ஊராட்சிகளில் இருந்து இறைச்சிக்கழிவுகளை நீர் வழித்தடத்தில் கொண்டுவந்து கொட்டுகின்றனர். மாசுபடுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சுற்றுச் சூழலையும் நீர் நிலைகளையும் காக்க வேண்டும்.