/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லோக் அதாலத்'; ரூ. 84 கோடி மதிப்புக்கு சமரசம்
/
'லோக் அதாலத்'; ரூ. 84 கோடி மதிப்புக்கு சமரசம்
ADDED : செப் 14, 2025 02:20 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் தாலுகா கோர்ட்களில் லோக்அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடந்தது.
சென்னை ஐகோர்ட் நீதிபதியும் திருப்பூர் மாவட்ட நிர்வாக பொறுப்பு நீதிபதியுமான ஜெகதீஷ் சந்திரா தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட நீதிபதி குணசேகரன் முன்னிலை வகித்தார்.
மக்கள் நீதிமன்றம் மொத்தம், 21 அமர்வுகளாக நடத்தப்பட்டு, 6,053 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் மொத்தம் 3,992 வழக்குகளுக்கு இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
அவ்வகையில், 84.03 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இதில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, 599 வழக்குகளுக்கு, 51.51 கோடி ரூபாய், சிவில் வழக்குகள் 130க்கு, 25.98 கோடி, நான்கு குடும்ப நல வழக்குகள் 3 லட்சம், சிறு குற்ற வழக்குகள், 3,207ல் 2.83 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. காசோலை மோசடி வழக்குகள் 14 விசாரிக்கப்பட்டு, 2.90 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. வங்கி வராக்கடன் வழக்கு 41ல், 52.50 லட்சம் ரூபாய்க்கு தீர்வு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில், நீதிபதிகள் பத்மா, பாலு, சுந்தரம், சுரேஷ், ஸ்ரீதர், செல்லதுரை, மோகனவள்ளி, ஸ்ரீவித்யா, கண்ணன், விக்னேஷ்மாது, வனிதா, செந்தில்ராஜா, நதியா பாத்திமா, லோகநாதன். கிருத்திகா, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள், வழக்குதாரர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.