தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெளி மாநிலத் தொழிலாளருக்கு வாழ்வாதாரம்

 வெளி மாநிலத் தொழிலாளருக்கு வாழ்வாதாரம்

 வெளி மாநிலத் தொழிலாளருக்கு வாழ்வாதாரம்


ADDED : ஜூன் 15, 2026 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூ ன் 16-ம் தேதியான இன்று, ஐ.நா. சபையால் 'சர்வதேச குடும்பப் பணப்பரிமாற்ற நாள்' கடைபிடிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் வாழ்பவர்களைத் தாண்டி, உள்நாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும் பணம், அந்தந்த மாநிலக் கிராமங்களின் வறுமையைத் துடைக்கும் பொருளாதார முதுகெலும்பாக விளங்குகிறது.

அதேநேரம், தொழிலாளர்களின் இந்த பணப்பரிமாற்றம் திருப்பூரின் உள்ளூர் பொருளாதாரத்தைச் சுழற்சியின்றிப் பாதிப்பதாகப் பொருளாதார ஆலோசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வளர்ச்சி பெற, முதலாளிகளின் முதலீட்டுடன், தமிழக தொழிலாளர்கள் மட்டுமின்றி, பீஹார், ஜார்கண்ட், ஒடிசா, உ.பி. போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 6 முதல் 8 லட்சம் தொழிலாளர்களின் வியர்வையும் முக்கியக் காரணம்.

இங்கு 8 முதல் 12 மணி நேரம் உழைக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களின் அத்தியாவசிய செலவுகள் போக, தங்களது சம்பளத்தில் 50 முதல் 60 சதவீதத் தொகையைச் சொந்த ஊரில் உள்ள குடும்பங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.

திருப்பூரிலிருந்து வடமாநிலக் கிராமங்களுக்குச் செல்லும் இப்பணம், அங்குள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முட்டுக் கொடுத்து தாங்குகிறது.

வடமாநிலத் தொழிலாளர்களின் இந்தச் சேமிப்புப் பரிமாற்றம், திருப்பூரின் உள்ளூர் வர்த்தக சுழற்சிக்குப் பெரிய அளவில் கை கொடுப்பதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

- இன்று (ஜூன் 16): சர்வதேச குடும்பப்: பணப்பரிமாற்ற நாள்.:

மாநகரின் வர்த்தக சுழற்சி பாதிப்பு: உள்ளூர் தொழிலாளர்கள் சம் பாதித்தால், அவர்கள் மளிகை, சினிமா, எரிபொருள், பிள்ளைகளின் கல்வி எனத் தங்கள் வருமானம் முழுவதையும் இங்கேயே செலவிடுவார்கள். இதனால் உள்ளூர் வணிகம் நேரடியாக அசுர வளர்ச்சி பெறும்.

ஆனால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மாநகரின் சாலை, மின்சாரம் போன்ற உட்கட்டமைப்புகளைப் பயன்படுத்தினாலும், தங்கள் பெரும்பகுதி வருமானத்தைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், மாநகரின் ஒட்டுமொத்த வர்த்தகச் சுழற்சி பாதிக்கப்பட்டு, உட்கட்டமைப்புவளர்ச்சியும் சுருங்குகிறது.

---இந்நிலையை மாற்ற, உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களைப் பணியமர்த்தத் தயாராக இருந்தாலும், ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, உள்ளூர் இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபடுவதற்கான விழிப்புணர்வையும் சூழலையும், அரசும் தொழில் துறையினரும் இணைந்து அவசரமாக ஏற்படுத்த வேண்டும்.

- ராமநாதன்: ஆடிட்டர்.:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us