/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் நார் நிறுவனத்தில் தீ விபத்து:பல லட்சம் சேதம்
/
தேங்காய் நார் நிறுவனத்தில் தீ விபத்து:பல லட்சம் சேதம்
தேங்காய் நார் நிறுவனத்தில் தீ விபத்து:பல லட்சம் சேதம்
தேங்காய் நார் நிறுவனத்தில் தீ விபத்து:பல லட்சம் சேதம்
ADDED : செப் 29, 2025 07:32 PM

திருப்பூர்:காங்கயத்தில் தேங்காய் நார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், நத்தக்காடையூர், நஞ்சப்ப கவுண்டன் வலசுவை சேர்ந்தவர் மனோகரன், 58; தேங்காய் நார் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மதியம் மில்லின் மேற்கு புறத்திலிருந்து திடீரென தீப்பற்றி மில்லில் இருந்த தேங்காய் நார் பகுதியில் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் காங்கயம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, இரண்டு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும் நிறுவனத்தில் இருந்த தேங்காய் நார்கள், மஞ்சி மெஷின்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்