ADDED : ஜூன் 06, 2026 03:13 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி தன்வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கோவிந்தராஜ், 68, என்பவர்அச்சிறுமியை அழைத்து சென்று தன் ஆட்டோவில் வைத்து அத்துமீறி நடந்துள்ளார்.
பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவிந்தராஜைக் கைது செய்து சிறையில்அடைத்தனர்.
