/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சீரமைப்பு பணி தாமதம்

/

சீரமைப்பு பணி தாமதம்

சீரமைப்பு பணி தாமதம்

சீரமைப்பு பணி தாமதம்


ADDED : ஜூன் 09, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பி.என்., ரோட்டில் கழிப்பிட சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டிருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்., ரோடு பகுதியில் மாநகராட்சி கட்டணக்கழிப்பிடம் மற்றும் குளியலறை அமைந்துள்ளது. கட்டணம் வசூலிக்கும் உரிமம், ஓராண்டுக்கு 7.2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது; சராசரியாக மாதம், 60 ஆயிரம் ரூபாய் ஏலத்தொகை.

கடந்த ஏப். 1ம் தேதி முதல் இந்த ஏல உரிமம் நடைமுறைக்கு வந்தது; ஏப்., 21ல் கழிப்பிடம் சீரமைப்பு செய்யும் பணி துவங்கியது. இதற்கென மாநகராட்சி பொது நிதியில், 2.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பராமரிப்பு பணி நடப்பதால் அதை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது.

ஒரு வாரத்துக்குள் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பதாக கூறிய ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள், அதன் பின் அப்பகுதிக்கே வரவில்லை என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனால், கழிப்பிடம் கடந்த இரு மாதமாக பயன்பாடின்றி வீணாக கிடக்கிறது. ஒரு வார காலத்தில் பணியை முடிப்பதாக கூறிய ஒப்பந்ததாரர், ஒரு மாதமாகியும் பணியை முடிக்காமல் இழுத்தடிப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.