/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொப்பரை விலை உச்சம்: கிலோ ரூ.235க்கு ஏலம்

/

கொப்பரை விலை உச்சம்: கிலோ ரூ.235க்கு ஏலம்

கொப்பரை விலை உச்சம்: கிலோ ரூ.235க்கு ஏலம்

கொப்பரை விலை உச்சம்: கிலோ ரூ.235க்கு ஏலம்


ADDED : ஜூன் 13, 2025 01:58 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், தென்னையில் மகசூல் குறைந்து, வரத்து பெருமளவில் குறைந்தது. இதனால், தேங்காய், கொப்பரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண் சந்தை இ - நாம், திட்டத்தின் கீழ், நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், உடுமலை, பொள்ளாச்சியிலிருந்து, 18 விவசாயிகள், 109 மூட்டை அளவுள்ள, 5,450 கிலோ கொப்பரைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

முதல் தரம், ஒரு கிலோ 220 ரூபாய் முதல், 235.10 ரூபாய் வரையும், இரண்டாம் தரம், 150.66 ரூபாய் முதல், 216.17 ரூபாய் வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.

கடந்தாண்டு கிலோ, 120 ரூபாய் வரை மட்டுமே விற்ற நிலையில், நடப்பாண்டு இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது.