/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா சிக்கியது
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா சிக்கியது
ADDED : செப் 29, 2025 12:30 AM
திருப்பூர்; கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கண்டறியும் தனிப்படை போலீசார். எஸ்.ஐ., செந்தில்குமார் தலைமையில் வீரபாண்டி, அய்யம்பாளையம் நால் ரோட்டில் ரோந்து மேற்கொண்டனர்.
அங்கு நின்றுகொண் டிருந்த ஒடிசாவை சேர்ந்த குடும்பத்தினர், எட்டு கிலோ கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது. ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களுடன், திருப்பூருக்கு வேலை தொடர்பாக தன்பாத் ரயில் மூலம் வந்தனர்.
பின், ஆட்டோ மூலம், வீரபாண்டியில் உள்ள ஒருவரை சந்தித்து கஞ்சா பொட்டலங்களை வினியோகிப்பதாக இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த வீரபாண்டி போலீசார், அட்சய மகந்தா, 27,கஜனான் பஹிரா, 44 மற்றும் நான்கு பெண்கள் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர்.