/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் கல்வெட்டு கொடி கம்பங்கள் அகற்றம்

/

திருத்தணியில் கல்வெட்டு கொடி கம்பங்கள் அகற்றம்

திருத்தணியில் கல்வெட்டு கொடி கம்பங்கள் அகற்றம்

திருத்தணியில் கல்வெட்டு கொடி கம்பங்கள் அகற்றம்


ADDED : மே 28, 2025 11:36 PM

Google News

ADDED : மே 28, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி நகராட்சியில் சித்துார் சாலையில் இருந்து பைபாஸ் சாலைக்கு வாகனங்கள் திரும்பும் பகுதியில், மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே, கடந்தாண்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் தலைமையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு கல்வெட்டு மற்றும் கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டது.

இதை, அமைச்சர் நாசர், எம்.பி., ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, திருத்தணி நகராட்சியில் அனைத்து கட்சியின் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்பட்டன.

நேற்று நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் போலீஸ் பாதுகாப்புடன், ஆளுங்கட்சியின் நுாற்றாண்டு கல்வெட்டையும், கட்சி கொடி கம்பத்தையும், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக அகற்றினர்.