/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லண்டன் டாக்டர் என கூறி வாலிபரிடம் ரூ.23 லட்சம் ஆன்லைனில் மோசடி
/
லண்டன் டாக்டர் என கூறி வாலிபரிடம் ரூ.23 லட்சம் ஆன்லைனில் மோசடி
லண்டன் டாக்டர் என கூறி வாலிபரிடம் ரூ.23 லட்சம் ஆன்லைனில் மோசடி
லண்டன் டாக்டர் என கூறி வாலிபரிடம் ரூ.23 லட்சம் ஆன்லைனில் மோசடி
ADDED : செப் 28, 2025 03:52 AM
திருநெல்வேலி:பேஸ்புக் மூலம் பழகிய நபர், தம்மை லண்டன் டாக்டர் எனக் கூறி திருநெல்வேலியைச் சேர்ந்த வாலிபரிடம் இருந்து ரூ.23 லட்சத்தை மோசடியாக பெற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேலசிந்தாமணியை சேர்ந்தவர் அருள்குமார் 27. இவரது தங்கை சவுதி அரேபியாவில் செவிலியராக உள்ளார். அவரிடம் ஆடம் அப்பாஸ் என்ற பெயரில் பேஸ்புக் மூலம் ஒரு நபர் அறிமுகமானார். தாம் லண்டனில் டாக்டராக இருப்பதாக கூறி பழகினார்.
ஆகஸ்ட் மாதம் பேசிய அவர், தாம் இந்தியா வந்திருப்பதாகவும், ரிசர்வ் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என்றும் கூறி, அவசரத் தேவைக்காக ரூ.50 ஆயிரமும் கேட்டார். லண்டன் திரும்பியதும் பணத்தைத் கொடுத்து விடுவதாக கூறினார். சவுதி செவிலியரும், தமது அண்ணன் அருள்குமாரிடம் சொன்னார். அவர் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினார்.
அருள்குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 30 ஆயிரம் பிரிட்டீஷ் பவுண்டுகள் அனுப்பி இருப்பதாக அந்த நபர் கூறினார்.
பணம் அனுப்பியதாக கோரி ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினார்.
அதுக்கு தாம் அனுப்பிய 50 ஆயிரம் ரூபாய் மட்டும் அனுப்புங்கள் என அருள்குமார் கூறினார் அதற்கு அந்த லண்டன் டாக்டர் அந்த தொகையை எடுத்துக் கொண்டு மீதத் தொகையை அனாதை இல்லங்களுக்கு வழங்கி விடுங்கள் என பெருந்தன்மையாக கூறினார்.
அதே நபர் பணம் இந்திய ரிசர்வ் வங்கியில் சிக்கி இருப்பதால் அதனை மீட்க வேண்டும் எனக் கூறி அதற்கு பணம் அனுப்புமாறு கூறி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.23 லட்சம் வரை பெற்றுள்ளார். இதற்காக லண்டன் டாக்டர் மட்டுமின்றி ரிசர்வ் வங்கி அதிகாரி, விமான நிலைய அதிகாரி என வேறு சில நபர்களும் பெண் குரலிலும் பேசி ஏமாற்றியுள்ளனர். அதன் பிறகு அந்த நபர்கள் தொடர்பில் இல்லை. எனவே இது குறித்து அருள்குமார் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். தாம் பணம் அனுப்பிய விபரங்கள் பேசிய நபர்களின் அலைபேசி எண்களை கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.