ADDED : ஜூன் 09, 2026 06:43 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இன்ஜினியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணகுமாரியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங் கலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கவின் 2025 ஜூலை 27ல் திருநெல்வேலி கே.டி.சி. நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவினின் காதலியான சுபாஷினியின் தம்பி சுர்ஜித், தந்தையும் போலீஸ் எஸ்.ஐ.,யுமான சரவணன், உறவினர் ஜெயபாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
வழக்கில் கிருஷ்ணகுமாரியை அண்மையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஜூன் 9 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜாமின் கோரி கிருஷ்ணகுமாரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா, அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 12க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
