/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அலைபேசியில் பேசியபடியே அரசு பஸ் ஓட்டிய டிரைவர்: அச்சத்தில் பயணிகள் விபத்து அச்சத்தில் பயணிகள்

ADDED : செப் 12, 2025 02:09 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அரசு பஸ் டிரைவர், அலைபேசியில் பேசிக்கொண்டே பஸ்ஸை இயக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்ற (TN72 N 2470) என்ற பதிவுஎண் கொண்ட அரசு பஸ் 40 பயணிகளுடன் புறப்பட்டது. டிரைவர், பயணத்தின் போது அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்று பேசியபடியே 10 நிமிடங்களுக்கு மேலாக பஸ்சை இயக்கியுள்ளார்.
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்ஸில் இருந்த ஒருவர் தனது அலைபேசியில் முழுச் சம்பவத்தையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில், டிரைவர் ஒரு கையில் ஸ்டி யரிங், மற்றொரு கையில் அலைபேசி வைத்துக்கொண்டு கவனக்குறைவாக பஸ்ஸை ஓட்டுவது தெளிவாக பதிவாகியுள்ளது. விபத்து அபாயத்தில் பஸ் ஓட்டிய டிரைவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.