/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மீட்கப்பட்ட ஆட்டோவை தர தாமதம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
/
மீட்கப்பட்ட ஆட்டோவை தர தாமதம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
மீட்கப்பட்ட ஆட்டோவை தர தாமதம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
மீட்கப்பட்ட ஆட்டோவை தர தாமதம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : செப் 11, 2025 03:38 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லுார் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் சொந்தமாக ஓட்டி வந்த ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தியிருந்தார். சில தினங்களுக்கு முன் காணாமல் போனது. இது குறித்து தச்சநல்லுார் போலீசில் புகார் செய்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் ஆட்டோவை திருடிச் சென்றுள்ளார். மானுார் பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளானார். ஆட்டோவை மீட்ட மானுார் போலீசார், பேச்சிமுத்து தச்சநல்லுார் ஸ்டேஷனில் புகார் அளித்திருப்பதை அறிந்து அங்கு ஒப்படைத்தனர்.
ஆட்டோவை பேச்சிமுத்துவிடம் ஒப்படைப்பதற்கு எஸ்.ஐ.,ரமேஷ் மணிகண்டனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் அதற்கு ரூ. 5 ஆயிரம் கேட்டு தாமதப்படுத்தி உள்ளார். இது குறித்து பேச்சிமுத்து போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் புகார் தெரிவித்தார். துணை கமிஷனர் பிரசண்ணகுமார் விசாரித்தார். இதனையடுத்து எஸ்.ஐ. ரமேஷ் மணிகண்டன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.