/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
1231 கிராமப்புற செவிலியர் பணிக்கு கவுன்சிலிங் அழைப்பு
/
1231 கிராமப்புற செவிலியர் பணிக்கு கவுன்சிலிங் அழைப்பு
1231 கிராமப்புற செவிலியர் பணிக்கு கவுன்சிலிங் அழைப்பு
1231 கிராமப்புற செவிலியர் பணிக்கு கவுன்சிலிங் அழைப்பு
ADDED : செப் 13, 2025 02:25 AM
திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் கடந்த நான்கரை ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராமப்புற செவிலியர் பணியிடங்களை நிரப்ப செப். 15-ம் தேதி முதல் கவுன்சிலிங் நடக்கிறது.
தமிழகத்தில் 2000க்கும் மேற்பட்ட கிராமப்புற செவிலியர், வி.எச்.என்., பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழக அரசு மருத்துவக் கல்லுாரி வளாகங்களில் செயல்படும் கிராமப்புற செவிலியர் (ஏ.என்.எம்) பயிற்சி மையங்களில் ஆண்டுதோறும் 600 பேர் படித்து வெளிவருகின்றனர். ஆனால் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற 2021க்கு பிறகு இந்தப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வி.எச்.என், ஏ.என்.எம். பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே அங்கன்வாடி பணியாளர்களாக இருந்து இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி முடித்த 1231 பேருக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
செப்.15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னையில் கவுன்சிலிங் நடக்கிறது.