/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி சிறைக்குள் ஜாதி மோதல்: கைதி காயம்
/
திருநெல்வேலி சிறைக்குள் ஜாதி மோதல்: கைதி காயம்
ADDED : அக் 26, 2025 01:43 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய சிறையில் ஜாதி ரீதியாக நடந்த மோதலில் ஒரு கைதி காயமடைந்தார்.
இச்சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தமிழக சிறைகளிலேயே ஜாதி ரீதியாக தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்படும் சிறை இதுதான்.
குறிப்பாக மூன்று ஜாதிகளை சேர்ந்த தண்டனை கைதிகள் தனித்தனி செல்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாத குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் தனியாக உள்ளனர். நேற்று 8வது பிளாக் பகுதியில் இருந்த தண்டனை கைதி துாத்துக்குடி தனசிங் என்பவரை மற்றொரு ஜாதியை சேர்ந்த கைதிகள் தாக்கியுள்ளனர். இதில் அவர் காயமடைந்தார்.
சிறை அதிகாரிகள் அவரை மீட்டனர். நடந்த சம்பவம், அந்த தகவல் எப்படி வெளியே சென்றது என விசாரணை நடக்கிறது.

