/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு பள்ளி மாணவர்கள் ஜாதி ரீதி மோதல்: கைது 13
/
அரசு பள்ளி மாணவர்கள் ஜாதி ரீதி மோதல்: கைது 13
ADDED : செப் 16, 2025 12:18 AM

திருநெல்வேலி; திருநெல்வேலி பேட்டை அருகே சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜாதி ரீதியாக மோதிக்கொண்டதையடுத்து 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரு நாட்களுக்கு முன் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இரு தரப்பினராக வெளியே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஜாதி ரீதியாக ஒவ்வொருவரும் ஒரு தலைவரின் பெயரைக்கூறி கோஷமிட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
மேற்கொண்டு மாணவர்களிடையே மோதல் வரக்கூடாது என்பதற்காக போலீசார், தகராறில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 13 பேரை கைது செய்து இளைஞர் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களில் பள்ளி, பாலிடெக்னிக்கில் பயில்பவர்கள் மற்றும் படிக்காத சிறார்களும் உள்ளனர்.
மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடப்பதால் அவர்கள் நலன் கருதி அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து சுத்தமல்லி பகுதியில் இத்தகைய தகராறு நடக்காமல் இருக்க போலீசார் கண்காணித்தும் வருகின்றனர்.