UPDATED : மே 17, 2026 06:33 PM
ADDED : மே 17, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
சின்னமனூர்:கம்பம் எம்.எல்.ஏ.,வாக த.வெ.க., சார்பில் போட்டியிட்ட ஜெகநாத்மிஸ்ரா வெற்றி பெற்றார். தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறி வருகிறார். கம்பம், உத்தமபாளையம், சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து சின்னமனூர் நகர்பகுதியில் ஆய்வு செய்தார். நகரில் ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பையை அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
