/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஜம்புலிப்புத்தூரில் இன்று தேரோட்டம்

/

ஜம்புலிப்புத்தூரில் இன்று தேரோட்டம்

ஜம்புலிப்புத்தூரில் இன்று தேரோட்டம்

ஜம்புலிப்புத்தூரில் இன்று தேரோட்டம்


ADDED : மே 11, 2025 05:15 AM

Google News

ADDED : மே 11, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று (ஞாயிறு) மாலை 6:00 மணிக்கு தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது.

கோயில் சித்திரை திருவிழா மே 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து சுவாமி முதல் நாளில் அன்ன வாகனம், 2ம் நாளில் சிம்ம வாகனம், 3ம் நாளில் ஆஞ்சநேயர் வாகனம், 4ம் நாளில் கருட வாகனம், 5ம் நாளில் ஆதிசேஷன் வாகனம், 6ம் நாளில் கஜேந்திர வாகனத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7ம் நாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தொடர்ந்து 8ம் நாளில் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா சென்றார். நேற்று கதலி நரசிங்கப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரு நாட்கள் நடைபெறும் தேரோட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்துச் செல்வர்.