/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலநெட்டூர் கோயிலில் ஜூன் 30ல் பிரம்மோற்ஸவம்
/
மேலநெட்டூர் கோயிலில் ஜூன் 30ல் பிரம்மோற்ஸவம்
ADDED : ஜூன் 17, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர், சாந்த நாயகி அம்மன் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடை பெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான விழா ஜூன் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தினந்தோறும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது. திருக்கல்யாணம் ஜூலை 7, தேரோட்டம் 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது.