/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரியில் நீராடிய பா.ஜ.,வினர் கோவிலில் வேல் வைத்து வழிபாடு
/
காவிரியில் நீராடிய பா.ஜ.,வினர் கோவிலில் வேல் வைத்து வழிபாடு
காவிரியில் நீராடிய பா.ஜ.,வினர் கோவிலில் வேல் வைத்து வழிபாடு
காவிரியில் நீராடிய பா.ஜ.,வினர் கோவிலில் வேல் வைத்து வழிபாடு
ADDED : ஜூன் 22, 2025 01:28 AM
சேலம், மதுரையில் இன்று நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில், தமிழக பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர்கள் சார்பில், அந்தந்த ஊரில் உள்ள முருகன் கோவில்களில், 1 அடி வேல் வைத்து சிறப்பு பூஜை செய்து எடுத்து வந்து ஒப்படைக்க, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார். அதனால் சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில், 1 அடி உயர வேல் தயார் செய்து, நேற்று, சீலநாயக்கன்பட்டி அருகே ஊத்துமலை முருகன் கோவிலில் மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட தலைவர் சசிகுமார், சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடினர். தொடர்ந்து தங்கமாபுரிபட்டணம் சென்று, தங்கமலை முருகன் கோவிலில் வேலை வைத்து வழிபட்டு கந்தசஷ்டி கவசம் வாசித்தனர். மாவட்ட பொதுச்செயலர்கள் ராஜசேகரன், மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி தலைவர் தனம், மேட்டூர் நகர தலைவர் நிர்மலா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து மதுரை புறப்பட்டனர்.
சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், பா.ஜ., வினர், ஏத்தாப்பூர் முத்துமலை முரு கன் கோவிலில், வேலை வைத்து பூஜை செய்து, மாநாட்டுக்கு புறப்பட்டனர்.