/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொல்லப்பட்டவர் துாய்மை பணியாளர் கணவர் உள்பட 5 பேரிடம் விசாரணை
/
கொல்லப்பட்டவர் துாய்மை பணியாளர் கணவர் உள்பட 5 பேரிடம் விசாரணை
கொல்லப்பட்டவர் துாய்மை பணியாளர் கணவர் உள்பட 5 பேரிடம் விசாரணை
கொல்லப்பட்டவர் துாய்மை பணியாளர் கணவர் உள்பட 5 பேரிடம் விசாரணை
ADDED : ஜூன் 19, 2025 01:33 AM
சங்ககிரி, உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டவர், சங்ககிரி நகராட்சி துாய்மை பணியாளர் என தெரியவந்துள்ளது. இதனால் அவரது கணவர், முன்னாள் துாய்மை பணியாளர் உள்பட, 5 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே அக்கமாபேட்டையில் உள்ள பாலத்தின் அடியில், முகம் சிதைந்து, உடல் அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் சடலத்தை, கடந்த, 16ல் சங்ககிரி போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இறந்த பெண், சங்ககிரி நகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றிய மணிமேகலை, 40, என தெரியவந்துள்ளது. அவரது பின்புற மண்டையில் தாக்கப்பட்டு, அவரது புடவையாலேயே கால்கள் கட்டப்பட்டிருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இவர், கணவரை பிரிந்து வாழ்ந்தார். இந்நிலையில் மணிமேகலைக்கும், அவருடன் முன்பு பணியாற்றிய, துாய்மை பணியாளர் கதிரேசனுக்கும், நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. இதனால், லட்சுமணன், கதிரேசன், இறந்த பெண்ணின் மொபைல் போனை வைத்திருந்தவர் உள்பட, 5 பேரை பிடித்து விசாரிக்கிறோம். மேலும், 26 பேரின் மொபைல் எண்களின் அழைப்பு உள்ளிட்ட விபரங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்..