ADDED : ஜூன் 05, 2026 05:54 PM

அரக்கோணம்: அரக்கோணத்தில் ஐ.ஏ.என்.எஸ் ராஜாளி கடற்கரை விமான தளத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி உள்ளது இந்த பள்ளியில் கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி 6 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது ஒவ்வொரு பயிற்சி முடியும் போதும் வீரர்களுக்கான சான்றுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான கோப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதல், ஆகாயத்தில் விமானத்தின் கையாளும் திறன், போர் ஏற்படும்பொழுது அதை கையாளும் யுக்தி,தொடர்ந்து பல மணி நேரம் ஆகாயத்தில் வட்டமிடுதல், ஹெலிகாப்டரில் இருந்து கடலில் இயங்கும் கடற்படை கப்பல்களில் எப்படி தரை இறங்குவது,தொடர்ந்து தரைத்தடத்திலும் ஆகாயத்திலும் கருத்து பரிமாற்றம் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது
106 -வது பயிற்சி நிறைவு விழா அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்கரை விமானதள மைதானத்தில் இன்று (ஜூன் 5) நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக சீப் அட்மிரல் சுசில் மேனன் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் அப்பொது வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் அனைவரையும் கவர்ந்தது.
மேலும் பயிற்சி முடித்த வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் அரக்கோண கடற்கரை விமானதள கமெண்டிங் ஆபிசர் மனோஜ், பயிற்சி பள்ளியின் கமெண்டிங் ஆபிஸர் கேப்டன் டுஷர் சர்மா மற்றும் பயிற்சி முடித்த வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
