/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை ஜோர்

/

வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை ஜோர்

வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை ஜோர்

வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை ஜோர்


ADDED : ஜூன் 10, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: சுட்டெரித்து வரும் வெயிலின் காரணமாக, பனை நுங்கு மற்றும் குளிர்பானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும், மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் குறையாமல் வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, வெளியில் செல்வதற்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஆர்.எஸ். மங்கலம், சாயல்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவில் பனை மரங்கள் உள்ள நிலையில், தற்போது நுங்கு சீசன் என்பதால் மூன்றுகண் கொண்டது ரூ.10 முதல் ரூ 20 வரை விற்கிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.