/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இயற்கை முறையில் விளைந்த பொருட்களை அரசு வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தலாம்   

/

இயற்கை முறையில் விளைந்த பொருட்களை அரசு வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தலாம்   

இயற்கை முறையில் விளைந்த பொருட்களை அரசு வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தலாம்   

இயற்கை முறையில் விளைந்த பொருட்களை அரசு வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தலாம்   


ADDED : ஜூன் 04, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளில் சாகுபடி செய்யப்பட்ட விளைபொருட்களை, விவசாயிகள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அரசு வணிக வளாக கட்டடங்களில் சந்தைப்படுத்தலாம்.

இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளில் சாகுபடி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை நுகர்வோர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடிகள் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், பூமாலை வணிக வளாகம், நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள கட்டடங்கள் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் விதைச்சான்று மற்றும் உயிர்ம சான்றளிப்புத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளனர்.

எனவே, இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளில் வேளாண் விளைபொருட்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இதன் மூலம் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு வேளாண்மை விற்பனை, வணிகத்துறை, ராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.