/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : செப் 27, 2025 11:26 PM
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் மாணவர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு, தற்கொலை தடுப்பு குறித்த விழிப் புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம் முன்னிலை வகித்தார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.
கலால் துறை தாசில்தார் ஜமால் முகமது, போதை பொருள் தடுப்பு இன்ஸ்பெக்டர் வலம்புரி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், மதுரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் குணசேகரன், ஒய்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் வள்ளிநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம் நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பல்வேறு கருத்துக்கள் மற்றும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.