தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை

கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை

கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை


ADDED : மார் 13, 2026 10:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 10:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, மூதாட்டியை கடப்பாறையால் தாக்கி 37 சவரன் தங்க நகை மற்றும் 12,000 ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை மங்கலமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தாராபீ, 65, இவர், நேற்று முன்தினம் இரவு அவரது மெத்தை வீட்டில் தன் மகள் அஷரப்பீ, 29, என்பவருடன் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை இரும்பு ராடு மூலம் தகர்த்து உள்ளே புகுந்த, முகமுடி அணிந்திருந்த கொள்ளையர்கள் நான்கு பேர் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி, கடப்பாறை மற்றும் கட்டையால் தாக்கி, வீட்டில் பிரோவில் இருந்த 37 சவரன் தங்க நகைகளையும், 12,000 ரூபாயை கொள்ளையடித்துக் தலைமறைவாகினர். தகவலறிந்த மங்கலமேடு போலீசார் வழக்கு பதிந்து, முகமுடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us