/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காந்தி பொது சேவை மையத்தில் மரக்கன்று நடவு
/
காந்தி பொது சேவை மையத்தில் மரக்கன்று நடவு
ADDED : மே 26, 2025 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுாரில் செயல்படும் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின், இருபதாவது ஆண்டு துவக்க விழா, பத்தாம் நம்பர் பழங்குடியின கிராமத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
காந்தி சேவா மைய நிர்வாகி இந்திரஜித் முன்னிலை வகித்தார். மையத்தின் அமைப்பாளர் நவுசாத் கேக் வெட்டி பழங்குடியின மக்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, தாசில்தார் அலுவலகம் மற்றும் பழங்குடியின கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.