தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கல்வி உபகரண பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கல்

 கல்வி உபகரண பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கல்

 கல்வி உபகரண பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கல்


ADDED : ஜூன் 05, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடு பகுதியில், கூடலுார் கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன.

பந்தலுார் அருகே கொளப்பள்ளி பகுதியில் செயல்படும், 'கூடு' அறக்கட்டளையின், 21ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, எருமாடு தனியார் மண்டபத்தில் நடந்தது.

மையத்தின் ஆசிரியர் கஸ்துாரி வரவேற்றார். வயநாடு பகுதியை சேர்ந்த பழங்குடியின திருநங்கை பிரகர்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அறக்கட்டளை இயக்குனர் சன்னி தலைமை வகித்து பேசுகையில்,''பெங்களூருவை சேர்ந்த ரோட்டரி கிளப் உதவியுடன், 400 மாணவர்களுக்கு, கல்வி உதவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள், சிறந்த ஆசிரியர்கள், சமூக சேவகர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us