UPDATED : ஜூன் 21, 2026 02:53 PM
ADDED : ஜூன் 21, 2026 01:30 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, தி.மு.க., சார்பில், தெருமுனை பிரசாரம் நடந்தது.நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார்.
ஊட்டி ஏ.டி.சி., திடல், பிங்கர் போஸ்ட், ஐந்து லாந்தர் மற்றும் காபி ஹவுஸ் பகுதிகளில் நடந்த பிரசாரத்தில் தலைமைக் கழக பேச்சாளர் உடுமலை தண்டபாணி பங்கேற்று, தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் குறித்தும், தற்போது நடந்து வரும் ஆட்சியின் நிறைவேற்றப்படாத திட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசினார்.
இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், மேற்கு நகர செயலாளர் ரமேஷ் மற்றும் அவைத்தலைவர் ஜெயகோபி உட்பட பங்கேற்றனர்.
