தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஒய்வெடுத்த இரு சிறுத்தைகள் தொழிலாளர்கள் அச்சம்

ஒய்வெடுத்த இரு சிறுத்தைகள் தொழிலாளர்கள் அச்சம்

ஒய்வெடுத்த இரு சிறுத்தைகள் தொழிலாளர்கள் அச்சம்


ADDED : மே 05, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் சிங்காரா எஸ்டேட் பகுதியில் இரு சிறுத்தைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

குன்னுார் சிங்காரா எஸ்டேட் மற்றும் அதனை சுற்றியுள்ள தேயிலை தோட்ட பகுதிகளில், சிறுத்தை, கரடி உட்பட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், சிங்காரா எஸ்டேட் பகுதியில் தாய் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் உலா வரும் காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசுமையான செடிகொடிகள் சூழ்ந்த பெரிய பாறையின் மீது தாய் சிறுத்தையும், குட்டி சிறுத்தையும் ஓய்வெடுத்துள்ளது.

இதனால், எஸ்டேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல அச்சத்தில் உள்ளனர். மக்கள் கூறுகையில், ‘சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us