ADDED : ஜூன் 09, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார், 8வது மைல் தேவர்சோலை சாலையில் மரம் சாய்ந்ததால், தமிழக –கேரளா இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் பகுதியில் பருவமழை துவங்கி உள்ள நிலையில் அவ்வப்போது பலத்த காற்றும் வீசுகிறது. தேவர்சோலை பகுதியில் மழை மற்றும் காற்று காரணமாக, 8வது மைல் பகுதியில், நேற்று மதியம் 3:00 மணிக்கு, மரம் சாய்ந்து, தமிழக–கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தேவர்சோலை பேரூராட்சி ஊழியர்கள், சாலையில் சாய்ந்த மரத்தை அகற்றி, 4:15 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.
