/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளி முன்பணத்தை முன்னதாக வழங்க வேண்டும் குடிநீர் வாரிய ஓய்வூதியர் வலியுறுத்தல்

ADDED : செப் 24, 2025 06:13 AM
மதுரை : 'பிறதுறைகளில் உள்ளது போல, குடிநீர் வாரிய ஓய்வூதியர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கான முன்பணத்தை விரைந்து வழங்க வேண்டும்' என ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் நலச்சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் பாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: அரசு துறை, பொதுத்துறை நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பண்டிகைகளை கொண்டாட கடந்த மே 22 ல் இதுவரை முன்பணமாக பெற்ற ரூ.4 ஆயிரம் தொகையை உயர்த்தி ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
அதை இதுவரை குடிநீர் வடிகால் வாரியத்தில் அமல்படுத்தவில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் முதல்வர் தலையிட்டு வரும் தீபாவளியை கொண்டாட, பிற ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல, குடிநீர் வாரிய ஓய்வூதியர்களுக்கும் பண்டிகை முன்பணம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். இதனால் 9500 குடிநீர் வாரிய ஓய்வூதியர்கள் பலன்பெறுவர்.
இதேபோல முதல்வர் உத்தரவை அலட்சியப்படுத்தி, அரசு அறிவித்த தேதிக்கு மாறாக ஒவ்வொரு முறையும் பின்தேதியிட்டு கடந்த ஜன.22 முதல் ஜன.25 வரை வழங்கப்பட்ட 7 அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் ஓய்வூதியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.