/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ஆவின் பைல்களுக்கு சென்னை அலுவலகத்தில் ஒப்பந்தம்; முடிந்தும் தொடர்ந்து இயங்குது வாகனங்கள்
/
மதுரை ஆவின் பைல்களுக்கு சென்னை அலுவலகத்தில் ஒப்பந்தம்; முடிந்தும் தொடர்ந்து இயங்குது வாகனங்கள்
மதுரை ஆவின் பைல்களுக்கு சென்னை அலுவலகத்தில் ஒப்பந்தம்; முடிந்தும் தொடர்ந்து இயங்குது வாகனங்கள்
மதுரை ஆவின் பைல்களுக்கு சென்னை அலுவலகத்தில் ஒப்பந்தம்; முடிந்தும் தொடர்ந்து இயங்குது வாகனங்கள்
UPDATED : அக் 04, 2025 07:11 AM
ADDED : அக் 04, 2025 03:51 AM

மதுரை: மதுரையில் ஆவின் பால் வினியோகம் செய்வதற்கான வாகனங்களின் அனுமதிக்கான பைல்கள் சென்னை நிர்வாக இயக்குநர் (எம்.டி.,) அலுவலகத்தில் 8 மாதங்களாக முடங்கிக் கிடக்கின்றன. இதனால் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் தொடர்ந்து வாகனங்களை இயக்க அனுமதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை ஆவினில் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 1.80 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 1.90 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. இவை பல்வேறு அளவுகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் பாக்கெட்டுகளாக முகவர்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இதற்காக 60க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
இவற்றில் 40 சதவீத வாகனங்களுக்கு ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு பதில் முறையான டெண்டர் விடுவித்து 13 வாகனங்களைத் தேர்வு செய்து, அவ்வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கான பைல்கள் சென்னை ஆவின் எம்.டி.,க்கு பிப்ரவரியில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 8 மாதங்களாகியும் தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பால் வினியோகப் பணிகள் பெரும் சவாலாக உள்ளது என அலுவலர்கள் புலம்புகின்றனர்.
மூன்றாவது எம்.டி., வந்தாச்சு ஆவின் ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மதுரையில் இருந்து பைல்கள் அனுப்பும்போது எம்.டி.,யாக வினித் இருந்தார். அவருக்கு பின் அண்ணாத்துரை பொறுப்பேற்று, அவரும் செப்.29ல் மாற்றப்பட்டார். தற்போது ஜான் லுாயிஸ் எம்.டி.,யாக வந்துள்ளார். மதுரை ஆவின் பைல்கள் முடக்கம் பின்னணியில் சென்னை எம்.டி., அலுவலகப் பணியாளர்கள் சிலர் மதுரை ஒப்பந்த வாகன உரிமையாளர்களிடம் கூட்டு வைத்து செயல்படுகின்றனர்.
இதனால் புதிதாக வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டால் பழைய ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் வெளியே செல்ல வேண்டும். எனவே புதிய வாகனங்களுக்கு எம்.டி., அனுமதி வழங்கி விடக்கூடாது என சென்னை அலுவலக பணியாளர்கள் சிலருடைய உதவியுடன் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் மூன்றுமுறை பழைய வாகனங்களுக்கே ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாக இயக்குநர் இப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றனர்.